Monday, August 2, 2010

மதராசப்பட்டினம்!

எனக்கு பிடித்த திரைப்படங்களை பற்றி எழுதும் போது மதராசப்பட்டினத்தை விட்டால் எழுதுவது அர்த்தமற்றதாகி விடும்.

இவ்வளவு நேர்த்தியான தமிழ் படத்தை சமீபத்தில் பார்த்ததாக ஞாபகம் இல்லை. இவ்வளவு அழகான, அமைதியான, நெஞ்சை தொடும் காதல் கதை. படம் முடிந்து தியேட்டரை விட்டு வெளிவரும்போது நெஞ்சில் ஒரு கணம்.

படம் நிகழ் காலத்தில் தொடங்கி 1945 க்கு பயணிக்கிறது. வயதான ஆங்கிலேய பெண்மணி லண்டனிலிருந்து இந்தியா வருகிறாள், கையில் தாலியோடு அதை உரியவனிடம் சேர்ப்பதற்காக. அவளுக்கு துணையாக அவளின் பேத்தியும் வருகிறாள். அவனை தேடும்போது வரும் அவளின் நினைவுகள் தான் படத்தின் கதை. நினைவுகள் 1945- ல் தொடங்குகிறது. இந்திய மதராசப்பட்டினத்தின் கவர்னர் பொண்ணு இந்தியா வருகிறாள். அவளிற்கும் இந்திய சலவை தொழிலாளிக்கும் காதல் ஏற்படுகிறது. நாயகனிடம் பேசுவதற்காக நாயகி தமிழ் கற்று கொள்கிறாள். நாயகன் ஆங்கிலம் கற்றுகொள்கிறான். ஒரு கட்டத்தில் நாயகனின் பாரம்பரிய தாலியை நாயகியிடம் குடுத்து "உன்னை யாரும் என்னிடமிருந்து பிரிக்க முடியாது" என்று சொல்கிறான். இவர்களின் காதலை அறிந்த கவர்னர் ஹீரோவை கொல்ல ஆணையிடுகிறார். அனால் ஹீரோ அவர்களிடமிருந்து தப்பித்து நாயகியுடன் ஓடுகிறார். இந்நிலையில் இந்தியா ஆகஸ்ட் 15 ல் சுதந்திரம் வாங்குகிறது, விடிந்தால் ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய நிலை. அதனால் அந்த இரவு முழுவதும் காதல் ஜோடிகளை துரத்துகின்றனர் கொல்வதற்காக. ஒரு கட்டத்தில் மாட்டிக்கொள்ளும்போது நாயகி, நாயகனை ஒரு ரப்பர் டியுபில் வைத்து ஆற்றில் அனுப்பிவிடுகிறாள் அவன் உயரை காப்பதற்காக.

நிகழ்காலத்திற்கு வருகிறது கதை. எப்படியோ தேடி அலைந்து நாயகனின் இடத்தை அடைகிறாள் வயதான பெண்மணி. நாயகியின் பெயரில் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் நூலகங்களை பார்க்கிறாள் நாயகி. நாயகன் கல்யாணம் செய்து கொள்ளாததும் தெரியவருது. நாயகனோ சில வருடங்களுக்கு முன்பே இறந்திருக்கிறான். அதனால் நாயகி இந்த தாலி தன்னிடம் இருப்பது தான் முறை என்று நினைத்து நாயகனின் சமாதியில் உயிரை விடுகிறாள்.

வயதான் பெண்ணின் இளமை பருவம் தான் கதை என்பதாலும், அவளுக்கு பேத்தி இருப்பதாலும் நமக்கு முன்பே புரிந்து விடுகிறது காதலர்கள் இணையவில்லை என்று. ஆனாலும் எப்படி பிரிந்தார்கள் என்ற எதிர்பார்ப்பு நம்மை நிமிர்த்தி உட்கார வைக்கிறது.

நாயகி அவ்வளவு அழகாக தெரிகிறாள் - வயதான நாயகி கூட, ஒருவேளை அந்த அழகான கதாப்பாத்திரத்தினாலோ என்னவோ!? சில இடங்களில் டைட்டானிக்கை ஞாபகப்டுதினாலும் இப்படம் தமிழுக்கு ஒரு டைடானிக் தான்.

ஜி. வி. பிரகாஷின் இசை படத்திற்கு பலம். "ஆருயிரே ஆருயிரே" பாடல் மிக அருமை. "Feel of love" and "The Dance" theme music-ம் அருமை.