Tuesday, June 22, 2010

ராவணன்

ராவணன்...!!

சிங்கம், புலி, சுறா, எறா, காக்கா, குருவி இதுங்க கிட்ட இருந்து விடுதலை குடுத்ததுக்கு மணிரத்னத்துக்கு நன்றி சொல்லலாம். ரொம்ப நாளைக்கு அப்பறம் அழகான, பிரம்மாண்டமான படத்தை பார்த்து அனுபவித்து ரசித்த திருப்தி. ஒளிப்பதுவும், பின்னணி இசையும் மிக அருமை.

விக்ரம் அவ்வளவு அருமையாக நடித்து உள்ளார், அவர் மட்டுமா எல்லோரும் தான். Ish மட்டுமல்ல அவருடைய நடிப்பும் அவ்வளுவு அழகு. ஒரு சில இடங்களில் காட்சிகளில் தொடர்ச்சி இல்லாதது போல் தோன்றினாலும் அது ஒரு குறை இல்லை. தன்னுடைய தங்கச்சியை கொன்னவனுடைய மனைவியை கொல்லாமல் அவள் மேல் காதல் கொள்வது நம்பும்படியாக இல்லைன்னு சிலர் சொல்றாங்க. அவ்வளவு அழகான பெண்ணை பார்த்தால், அடுத்தவன் மனைவியே அனாலும் கூட எப்படி காதல் கொள்ளாமல் இருப்பது? சிலர் திருநெல்வேலியில் எங்கே காடு இருக்கு? எங்கே மண்டபம் இருக்குன்னு உளறுகிறார்கள். இது ஒரு திரைப்படம், கற்பனை கதை அவ்வளவே.

Ish மலை மேலிருது கீழே விழும்போது அவ்வளவு தத்ரூபமாக இல்லை. கயித்தை கட்டி இறுக்குவதும், பொம்மையை போலவும் தோன்றுகிறது. Ish -யே தூக்கி போட்டிருக்கலாம், தண்ணி தானே!? ஓரிடத்தில் காட்டுசிருக்கி பின்னணி இசை வருகிறது - இது அனுராதா ஸ்ரீராம் பாடிய பாஸ்ட் பீட் இல்லை, யாரோ கரகர குரலில் பாடிய ஸ்லொவ் சாங், நன்றாக இல்லை.

கண்டிப்பாக பார்த்து ரசிக்க கூடிய படம்.

3 comments:

  1. There is a talk that Ish is carrying now. In some places of the movie if u observe that talk looks true.

    ReplyDelete
  2. Even I think so, thats the reason Maniratham did not show her hip in the movie. But you saw and found out. In the movie, you were looking only at just Ish?

    ReplyDelete
  3. Lal,

    என்னால தான் பாக்க முடியல. நான் வந்த பிறகு திரும்ப ஒருதரம் போலாமா ?

    -Mani

    ReplyDelete