ஆயிரத்தில் ஒருவன் கண்டிப்பாக ஆயிரத்தில் ஒரு படைப்பு. மிக அற்புதமான படம். அவதார், மம்மி போன்ற ஆங்கில படங்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் ஆனால் இப்படத்தை பழிக்கிறார்கள்!
இப்படத்தை பற்றிய எல்லா ரிவிவ்யும் சோழர்களை தரக்குறைவாக சித்தரிப்பதாக சொல்கிறது. இந்த மாதிரி புரியாத ஜென்மங்களுக்க்காகதான் "இக்கதை கற்பனையே" என்று படம் தொடங்குவதுற்கு முன்பே போடுகிறார்கள். ஏழு மிக பெரிய பிரமாண்டமான தடங்களை உண்டு பண்ணியவர்களுக்கு உணவிற்கு வழி பண்ண தெரியாதான்னு கேள்வி கேட்கிறார்கள், சோழர்களோ பயந்து உயிர் வாழ ஒரு குகை போன்ற இடத்தில வாழ்கிறார்கள். அவர்களின் முன்னோர்களின் சொல்லை கேட்டு வெளியே வர பயந்து உள்ளேயே இருக்கும்போது எப்படி நாகரீகம் எல்லாம் சாத்தியமாகும்? மன்னன் தன மக்களை கொல்வதால் அவன் கடைசியில் சிக்க வேண்டும் என்று தோன்றவில்லை என்று ஆவீ-யில் போட்டிருக்கிறார்கள். தப்பு செய்பவர்களை மன்னன் தண்டிப்பது தானே சரியானது!?
எல்லோரும் ரீமாசென் நடிப்பை மட்டுமே புகழ்கிறார்கள். ரீமாசென்-இன் நடிப்பு நன்றாக உள்ளது அவர் துப்பாக்கி தூக்கும் இடங்களை தவிர. அன்ட்ரியா-வும் நன்றாகவே நடித்துள்ளார். கார்த்தி-இன் நடிப்பும் மிக நன்றாகவே உள்ளது.
ஆனாலும் சில விஷயங்கள் புரியவில்லை இப்படத்தில். அடுத்த நாட்டிற்கு சென்று நம் நாட்டு ராணுவம் அவர்கள் மக்களை கொல்வது சாத்தியமா? அல்லது அந்த தீவு எந்த நாட்டிற்கும் சேராமல் உள்ளதா? ஒருவேளை அந்நாடு நமக்கு முழு சுதந்திரத்தை குடுதுள்ளதுன்னு வைத்துக்கொண்டால் இதுவும் சாத்தியமே. அடுத்து, அந்த புதை மணல். நடராஜரின் நிழல் பலவகையான reflection -க்கு அப்புறம் உருவாக்க முடியும்ன்னு வைத்துக்கொண்டாலும், எப்படி நடராஜரின் சிலையின் நிழல் அவ்வளவு வேகமாக மறைகிறது? எனக்கு physics நல்லா தெரியவில்லை அதனால் இது எனக்கு புரியவில்லை.
பிரம்மாண்டம் என்றால் என்ன என்று உணர்த்திய செல்வராகவனுக்கு நன்றி!!!
-ஒரு ரசிகன்
நல்ல விர்மர்சணம் ! Keep it up!
ReplyDeletesome spelling mistakes...
ReplyDelete