நேற்று "ரேணிகுண்டா" படம் பார்த்தேன் நல்லாவே இருந்தது. இப்படத்தின் விமர்சனத்தை பற்றி இங்கே எழுதவில்லை மாறாக இம்மாதிரி படங்கள் தேவையான்னு ஒரு கேள்வி மனதில் தோன்றியது.
அதற்குமுன் சமீப காலத்தில் சேலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்கிறேன். என்னுடைய UG கல்லூரி கால நண்பனை சந்தித்தேன். அவன் எங்கள் college junior ஒருவனை பார்த்திருக்கிறான் ஒரு பெரிய ரௌடியாக. அந்த ஜூனியர் பையன் எங்களை "அன்னா", "வாங்க", "போங்க" என்றே மரியாதையுடன் கூப்பிடுவான் கல்லூரி காலங்களில். ஆனால் இப்பொழுது வெள்ளை வேட்டி, வெள்ளை ஷர்டில் ஒரு ரௌடியாக உலா வந்திருக்கிறான். பார்ப்பவர்கள் அவனுக்கு வணக்கம் செலுத்தி இருக்கிறார்கள். என் நண்பனோ அவனை பார்த்ததும் ஒரு ஜூனியர் என்ற எண்ணத்திலே பேசி இருக்கிறான். ஆனால் அவனோ எந்த ஒரு மரியாதையும் இன்றி "ஹ்ம்ம்", "அஹ", "ஓகே" என்று ஒறிரு வார்த்தைகளை உதிர்த்துவிட்டு கிளம்பி இருக்கிறான். அப்புறம்தான் தெரிந்தது அவன் ஏதோ ஒரு கொலை கேஸ்ல மாட்டி ஒரு ரௌடியாக உருவேடுத்துள்ளான்னு.
இம்மாதிரி பசங்களுக்கு ரௌடிகள் ஹீரோவாக தெரிகிறார்கள் அதனாலேயே அவர்களும் ரௌடிகளாக மாற்றபடுகிறார்கள். நானும் கல்லூரி காலங்களில் பார்த்திருக்கிறேன் சில அடாவடி, ரவுடி பசங்கள் கிட்டத்தட்ட ஹீரோவாக அவர்களை அவர்களே நினைத்துக்கொள்வதை.
ஓகே, இப்பொழுது படத்திற்கு வருவோம். இப்படத்தில் வரும் கதாநாயகர்கள் அனைவரும் டீன்-எஜெர்ஸ். அவர்கள் காசுக்காக கொலை பண்ணும் கூலிப்படையினர். இம்மாதிரி கெட்ட கொலைகாரர்களை நாயகர்களாக காட்டுவது நியாயமா? ஏற்கனவே ரௌடிகளை ஹீரோவாக என்னும் ஆட்களின் மனதில் இம்மாதிரியான படங்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தாதா? சமுதாயத்தை இம்மாதிரியான படங்கள் பாதிக்குமா இல்லை புகைபிடிக்கும் காட்சிகள் பாதிக்குமா? புகைபிடிக்கும் ஹீரோக்களை எதிர்க்கும்(அதுவும் பெரிய ஹீரோசை மட்டும் எதிர்க்கும் - அப்பத்தான் பெருசா பேசபடுவோம்ன்னு எண்ணம்!?) அன்புமணி போன்றோர் இம்மாதிரியான படங்களை எதிர்க்க வேண்டாமா? ஓகே அவர்களுக்கு உண்மையிலே சமுதாயம் பாழாக கூடாதென்ற எண்ணம் இருந்தால் தானே. எல்லாமே பேருக்காகவும், புகழுக்காகவும் தானே நடக்குது தமிழ் நாட்டில்.
எது எப்படியோ, இச்சமுதாயம் திரைப்படங்களை பார்த்து அதையே பின்பற்றும் நிறைய முட்டாள்களை கொண்டிருப்பதால், திரைப்படங்கள் சமுதாயத்தில் மிகபெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனபது மறுக்க முடியாத உண்மை. அதனால் திரைத்துறையினர் சமுதாயத்தை மனதில் கொண்டு படங்களை உருவாக்க வேண்டும்.
-சமுதாய நலம் விரும்பி.
நான் ரேணிகுண்டா பார்கவில்லை. ஆனால் அந்த படத்தை விட.. "ப்பயம்.. வேட்டை ஆரம்பம் ஆயிடிச்சிள்ள", "இந்த லூசு ஒருத்தர சொன்னா..", "ஏன்னா.. நீ என் நண்பன்..", "நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னா..","மழை நிக்கறதுக்குள்ள..","கை இருக்கும் கால் இருக்கும்... நட்டு இருக்கும் போல்ட் இருக்கும்" போன்ற படங்களின் தாக்கம் அதிகம்ன்னு நினைகிறேன்.
ReplyDeletechanceless comment... I like the movies "ஏன்னா.. நீ என் நண்பன்..", "நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னா..", very much but these movies are affecting our society which I accept. People have to be well educated to solve this issue.
ReplyDelete