Thursday, February 4, 2010

முதல்வரின் அறியாமையா அல்லது எகத்தாளமா?

அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை முதல்வர் சந்தித்தபோது ஒரு நிருபர், 'திரைப்படத் துறையினருக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறீர்கள்.​ திரையரங்கில் டிக்கெட் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?' என்று கேட்டார்.

அவர் பக்கமாகத் திரும்பிய கருணாநிதி, 'இரண்டு கேள்விகளும் பொருந்தி வரவில்லையே?.​ அந்தக் கேள்வியை அப்படிக் கேட்கக் கூடாது.​ தனித்தனியே கேட்க வேண்டும்.​ நான் ஒரு நிருபராக இருந்து இந்தக் கேள்வியைக் கேட்கிறேன் பாருங்கள்' என்று கூறிவிட்டு "சினிமா கட்டணத்தை மாற்றி அமைப்பீர்களா?​ என்று ஒரு கேள்வி கேட்க வேண்டும்.​ திரைப்படத் துறையினருக்கு பல சலுகைகளை அளித்து வருகிறீர்களே.​ அவர்கள் உங்களுக்கு நன்றி காட்டுகிறார்களா? என்று தனியாக கேட்க வேண்டும்" என்கிறார்.

சினிமா கட்டணத்தால் பாதிக்கபடுபவர்கள் முட்டாள் ஏழை மக்களே, அதனால் திரை துறையினருக்கு வழங்கப்படும் சலுகைகள் மக்களுக்கு கொஞ்சமாவது சேரவேண்டும் என்ற எண்ணத்தில் இக்கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் அதை புரிந்து கொள்ளாத நம்முதல்வர் "திரைப்பட துறையினர் உங்களுக்கு நன்றி காட்டுகிறார்களா?" என்று கேட்கசொல்கிறார். என்ன ஒரு பேராசை? அவர்கள் உங்களுக்கு நன்றி காட்டினால் என்ன காட்டாவிட்டால் பொதுமக்களாகிய எங்களுக்கு என்ன?

நிருபர்கள் கேட்ககூடிய கேள்விகளை கூட முதல்வரே முடிவு பண்ணுவதை என்னவென்று சொல்வது?!

ஏன் சினிமா துறைக்கு இவ்வளவு சலுகைகள்? அவர்கள் எவ்வகையில் மற்ற தொழிலாளிகளை விட உயர்ந்தவர்கள்? எதற்காக அவர்களுக்கு இலவச வீட்டு நிலங்கள்? இக்கேள்விகளை கேட்க எதிர்கட்சிகள் கூட தயங்குகின்றன சினிமா காரர்களின் தயவு வேண்டும் ஒட்டு வாங்க என்பதினால். என்ன ஒரு அநியாயம்.

முதல்வர் தான் இப்படி என்றால் சினிமா காரர்கள் மகா கேவலம். எதற்காக தமிழக முதல்வருக்கு பாராட்டுவிழா? அப்படியே அவர் உங்களுக்கு நல்லது செய்திருந்தால் அது அவரது கடமை, முதல்வரின் வேலை. வெட்கமில்லையா உங்களுக்கு? யாரு முதல்வரா வந்தாலும் பாராட்டு விழா பல முறை எடுத்து வேண்டியதை சாதிதுக்கொள்கிறீர்கள். பொதுமக்களின் பணத்தில் உங்களுக்கு எதற்கு இலவசங்கள்?

மொத்தத்தில் ஆள்றவனுக்கும் வெட்கமில்லை ஆடரவங்களுக்கும் வெட்கமில்லை தமிழகத்தில்.


-பொது ஜனம்.

1 comment:

  1. பட்டய கெளப்புற.. தொடர்ந்து கலக்கவும்

    ReplyDelete